குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு „குழந்தைகள் அறையை“ உருவாக்குவது தொடர்பில் கர்ப்பிணிப்பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது அவர்களின் கரு வளர்ச்சியில் இருந்து தீர்மனிக்கப்படுகிறது. பெண் கருவுற்ற காலத்தில் இருந்து கண்ணால் பார்க்கும் ,காதால் கேட்கும் செயற்பாடுகள் மகிழ்ச்சியைத் தரக் கூடியதாக இருந்தால் குழந்தையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இதனை அடிப்படையாக கொண்டு சுகாதார மருத்துவ அதிகாரி பணிமையின் கீழ் செயற்படும் குடும்ப நல அலுவலர்கள் மூலம் “குழந்தைகள் அறை “அமைப்பது தொடர்பில் கர்ப்பிணிப் பெண்களுக்கு அறிவுத்தப்பட்டு வருகிறது.
அதாவது பெண் கருவுற்ற நாளில் இருந்தும் குழந்தை பிறந்து மூன்று வயது அடையும் வரை வீட்டில் அந்த குழந்தை யின் அறை சிறப்பானதாக அமைய வேண்டும்.
அந்த அறையில் ஓவியங்கள், கைவினைப் பொருள்கள் , குழந்தை விளையாட்டு உபகரணங்கள்,புத்தகங்கள்,சத்த மிடும் கருவிகள்,ஒளிப்படங்கள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய அறையாக இது அமைய வேண்டும் – என்று தெரிவிக்கப்பட்டது.