தேவையானவை :
பால் – 2 லிட்டர்
பாதம் – 15 கிராம்
பிஸ்தா – 15 கிராம்
முந்திரி – 15 கிராம்
ஜெலட்டின் – 2 டீஸ்பூன்
ரோஸ் எசன்ஸ் – 1 டீஸ்பூன்
ஐசிங் சுகர் – 200 கிராம்
கார்ன்ப்ளேவர் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

1 . ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் பாலை ஒரு லிட்டர் பாலாகும் வரை நன்கு காய்ச்சவும் . பால் வற்றிவரும் போதே ஐசிங் சுகரை சேர்க்கவேண்டும் பின் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது பாலை எடுத்து அதில் கார்ன்ப்ளேவரை கரைத்து பாலில் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் வைத்து கிளறவும் . கலவை நன்கு கெடியானதும் இறக்கவும் .

2 . தண்ணீரில் பாதம் , முந்திரி , பிஸ்தாவை ஊறவைத்து சிறிது பாலை சேர்த்து மிக்ஸ்சியில் நன்கு அரைத்துக்கொள்ளவும் . ஜலட்டினை ஐம்பது மில்லி சூடான தண்ணீரில் கரைத்துக்கொண்டு கெட்டியான பாலில் முந்திரி கலவை , ஜெலட்டின் , ரோஸ் எசன்ஸ் எல்லாவறையும் சேர்த்து நன்கு கலக்கி குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறையவிடவும் .