வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிகரெட் பாவனையை முற்றாகத் தடை செய்யவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியாதெற்கு தமிழ் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் இன்று நடைபெற்ற அமர்வில் குறித்த பிரேரணை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்படியான சட்டங்கள் சகல கிராமங்களிலும் நடைமுறைக்கு வந்தால் மக்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு எவ்வித ஐயமும் இல்லை.  புகையிலை தடை செய்வதாக வதந்திகள் வருவதற்கான காரணத்தை மக்கள் தான் சிந்திக்க வேண்டும்.