செல்போனில் பேசும் போது நாம் சொல்லும் முதல் வார்த்தை ஹலோ தான். எல்லாருமே தொன்று தொட்டு இதை தான் பின்பற்றி வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு சுவாரசிய காரணம் இருக்கிறது.

காலையில் எழுந்து சூரியனை பார்த்த காலமெல்லாம் மலையேறி போய் விட்டது. கண் திறந்ததுமே பார்க்கும் முதல் விஷயம் செல்போன் என்றாகி விட்டது. பலரும் இன்று டிஜிட்டல் உலகிற்கு அடிமையாகி இருக்கிறோம். இதிலும், யாரை பார்த்தாலும் காதில் செல்போனை வைத்து விடுகிறார்கள். ஹலோ என்று ஆரம்பிப்பது தான் எல்லா கதையும் பேசிக்கொண்டே போக அந்த போனே வாய் வலிக்காதாப்பா என்ற எண்ணத்திற்கு சென்று விடுகிறது.

அதிலும், சிக்னல் குறிக்கிட்டால் கூட ஹலோ புராணம் தான். அதில் என்னத்தான் இருக்கிறது. இந்த ‘ஹலோ’ எப்படி போனுடன் இப்படி ஐக்கியமானது. இதில் ஒரு கட்டுக்கதை கூட இருக்கிறது. அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் செல்போனை கண்டுபிடித்ததும், தன் காதலி ஹலோவிற்கு போன் செய்து அவர் பெயரை அழைத்ததாக கூறுவர். அப்போ, அவர் காதலி வீட்டில் மட்டும் போன் எப்படினு நம்ம கேட்கணுமே? அப்போ இது கட்டுக்கதை தானே. சரி விடுங்க..

ஹலோ என்பது வரவேற்பின் அடையாளம். இந்த வார்த்தை 1830 ஆம் ஆண்டுக்கு பிறகே புழக்கத்தில் வந்தது. போனை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் போன் பேச தொடக்க வார்த்தையாக ‘ஆஹாய்’ என்ற சொல்லைத் தான் பயன்படுத்தியுள்ளார். எல்லாருமே இதை தான் பின்பற்றி இருக்கிறார்கள். அதன் பின்னரே, அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன் ‘ஹலோ’ என்ற வார்த்தையை புழக்கத்தில் கொண்டு வந்து இருக்கிறார். அதன் பிறகே, ஹலோ என்ற வார்த்தைக்கு நாமே அடிமையாகி இருக்கிறோம்.