கிரகணம் என்றாலே, இயல்பாகவே அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் அச்சம் கூடிக்கொள்கிறது. அதுவும் சூரிய கிரகணம் என்றால் அழிவு, ஆபத்து, தீய சக்தியின் உக்கிர தாண்டவம் என்றெல்லாம் சிலர் பேசி வருகிறார்கள். உண்மையில் சூரிய கிரகணம், மனிதனுக்கு பேராபத்தைதான் தருகிறதா? என்பது குறித்து விளக்கம்.

●அறிவியல் சொல்லும் விளக்கம்:

“ சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, சந்திரனின் பகுதி சூரியனை விட பெரிதாக காட்சியளிக்க கூடிய அளவு பூமிக்கு அருகில் வர வேண்டும். அப்படி இருந்தால், அதுவே சூரிய கிரகணம். இது ஒரு அமாவாசை நாளன்று தான் ஏற்படுகிறது. இதனால், சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். புவியைப் பொறுத்தவரை ஓர் ஆண்டில் இரண்டிலிருந்து ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படக்கூடும். ஒருமுறை முழு சூரிய கிரகணம் உண்டான அதே இடத்திலேயே, மீண்டும் தோன்ற ஏறத்தாழ 375 ஆண்டுகள் ஆகும். முழு சூரிய கிரகணகங்கள், இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்கின்றன. இது அறிவியல் பூர்வமானது.

●சாஸ்த்திரங்கள் சொல்லும் ரகசியம்:

சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில், சூரியன்-சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதில் கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படுகிறது என்பது, பொதுவான ஜோதிட கணிப்பாக இருக்கிறது. அதாவது, சூரியன்-சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.

ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்த்திரங்கள் கூறுகின்றன பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு.

●கிரகண தோஷத்தால் ஏற்படும் பாதிப்புகள்:

சூரியனின் ஒளி வீச்சு பூமி மீது பதியாமல் தடைபடுகிற பொழுது, இயற்கையில் சில மாற்றங்கள் தானாகவே நிகழ்ந்துவிடுகின்றன. இதில், நல்லதை விட கெடுதலே அதிகம் நடக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு பேராபத்து:

கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே அவர்களுக்கு சிறப்பு. அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறன. அதன் காரணமாக பிறக்ககூடிய குழந்தைகளுக்கு சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.