யாழ்ப்பாணம் மட்­டு­வில் பன்­றித்­த­லைச்சி கண்­ணகை அம்­பாள் ஆல­யத்­துக்கு உந்­து­ரு­ளி­யில் வரு­கின்ற அடி­யார்­கள் அவ­சி­யம் தலைக்­க­வ­சம் அணிந்து வரு­மாறு ஆலய நிர்­வா­கத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர்.

வாகனப் பாது­காப்பு நிலை­யங்­க­ளில் தலைக்­க­வ­சம் பாது­காப்­பாக வைப்­ப­தற்கு ஏற்­பா­டு­கள் மேற்­கொள்­ளப்பட்­டுள்­ள­தால் தலைக்­க­வ­ச­மின்றி ஆல­யத்துக்கு வருகை தர­வேண்­டா­மென உந்­து­ரு­ளி­க­ளில் வரு­வோ­ருக்கு ஆல­யத்­தி­னர் அறி­வித்­துள்­ள­னர்.

கடந்த வரு­டம் தலைக்­க­வ­ச­மின்றி வந்த பெண் வீதி விபத்­தில் சிக்கிச் சாவ­டைந்­தார். இந்­நி­லை­யில் உயிர்ச் சே­தத்தைத் தடுக்­கும் முன்­னேற்­பாடு நட­வ­டிக்­கை­யாக பாது­காப்பு நிலை­யங்­க­ளில் தலைக்­க­வச பாது­காப்பு ஒழுங்­கு­கள் மேற்கொள்­ளப்­பட்­டுள்­ளன.

  1. மேலும் ஆல­யத்­துக்கு வரும் வாக­னங்­களை வீதி­யோ­ரம் விடா­த­வாறு அரு­கில் உள்ள வித்­தி­யா­லய மைதா­னத்­தில் தரிப்­பிட வச­தி­கள் ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.
பாட­சாலை அருகே உள்ள சாலை­யூ­டாக வாக­னங்­க­ளைக் கொண்டு சென்று தரிப்­பி­டத்­தில் விடு­மா­றும் அறி­வித்­துள்­ள­னர்.

ஆல­யத்துக்கு வரு­வோர் தமது உடை­மை­க­ளைப் பாது­காக்­கும் வகை­யில் தங்க ஆப­ர­ணங்­கள் அணிந்து வரு­வதைத் தவிர்க்­கு­மா­றும் கேட்­டுள்­ள­னர்.