• மேஷம்

  மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

 • ரிஷபம்

  ரிஷபம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக்கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.

 • மிதுனம்

  மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர் வீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.

 • கடகம்

  கடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத் தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர் கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகை கள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

 • சிம்மம்

  சிம்மம்: தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பயணங் களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

 • கன்னி

  கன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் களின் வருகையால் வீடு களைக்கட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபா ரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வெற்றி பெறும் நாள்.

 • துலாம்

  துலாம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக  குடும்பத் தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வியாபா ரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். மகிழ்ச்சியான நாள்.

 • விருச்சிகம்

  விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்  பான்மை தலைத் தூக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். எதிலும் முன்யோசனை தேவைப்படும் நாள்.

 • தனுசு

  தனுசு: சின்ன சின்ன வேலை  களையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பணப்பற் றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

 • மகரம்

  மகரம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். சகோத ரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருப்பார்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் உயரும் நாள்.

 • கும்பம்

  கும்பம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மற்றவர்க ளுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதித்துக் காட்டும் நாள்.

 • மீனம்

  மீனம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பணவரவு திருப்தி தரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைகள் நீங்கும் நாள்.