• மேஷம்

    மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். கேட்ட இடத்தில் பணம்
    கிடைக்கும்.விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடர் வதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும்.பழைய பகை, கடன் நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். தானுண்டு தன் வேலை
    யுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகள் உங்கள் பேச் சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்
    வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

  • கடகம்

    கடகம்: பணப்புழக்கம் அதிக ரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வெளிவட்டாரத்தில் புதுஅனுபவம் உண்டாகும்.  வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத் துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். மாற்றம் உண்டாகும் நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச்சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

  • கன்னி

    கன்னி: முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. பழையகடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலமாக லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். உழைப்பால் உயரும் நாள்.

  • துலாம்

    துலாம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக்கொள்வார்கள். வியாபாரத்தில்அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். மனசாட்சிப் படி செயல்படும் நாள்.

  • தனுசு

    தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதிர்பார்த்தவை தாமதமாகும்.சிலரின் நயவஞ்சக செயலை நினைத்து வருந்துவீர்கள். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள்.

  • மகரம்

    மகரம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்துப் போகும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திடாதீர்கள். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம்தரும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரை
    சந்திக்கலாம். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். உற்சாகமான நாள்.

  • மீனம்

    மீனம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு.மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் நாள்.