மூத்த தமிழ் திரையுலக இயக்குநரும், நடிகருமான மகேந்திரன் 2.4.19 (செவ்வாய்க்கிழமை) சென்னையில் காலமானார்.

கடந்த சில நாட்களாக அவர் உடல் நலக்குறைவு காரணமாக‌ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து அண்மையில் வெளிவந்த ‚பேட்ட‘ திரைப்படத்தில் மகேந்திரன் நடித்திருந்தார். மேலும் தெறி, சீதக்காதி,மிஸ்டர் சந்திரமௌலி போன்ற பல அண்மை திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.

தமிழ் திரையுலகில் மிகவும் சிலாகிக்கப்பட்ட திரைப்படமான ‚உதிரிப்பூக்கள்‘ திரைப்படம் மகேந்திரன் இயக்கிய சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை உள்பட பல திரைப்படங்களையும் இவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படங்களில் மகேந்திரனின் இயக்கும், ரஜினிகாந்தின் நடிப்பு மற்றும் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவரது மகனான ஜான் மகேந்திரனும் சச்சின் உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.