தற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் சீரான மின்சார விநியோகம் இடம்பெறும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது . நாட்டினுள் நிலவும் கடும் வறட்சியான வானிலையால் ஏற்பட்ட மின்சார தடைக்கு தீர்வாக மூன்று கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது . தற்போது அமுல்படுத்தப்படும் மின்சார தடையை நிறுத்துவதற்காக 500 முதல் 600 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது . அத்துடன் எதிர்காலத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான யோசனை ஒன்றை மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று அமைச்சரவையில் முன்வைத்துள்ளார் . அது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடப்பட வேண்டும் என அமைச்சர்கள் கூறியதன் காரணமாக அந்த யோசனை குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.