ஒரே பிர­ச­வத்­தில் பிறந்த நான்கு குழந்­தை­க­ளுக்கு அர­ச­த­லை­வர் நிதியு­தவி வழங்­கி­யுள்­ளார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

விமா­னப்­படை அலு­வ­ல­ரான அயேஷா தில்­ஹானி தனது முத­லா­வது பிரவத்தில் நான்கு குழந்­தை­க­ளைப் பெற்­றெ­டுத்­தார். இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்­தை­க­ளி­ன­தும் பாது­காப்பு, போசணை மற்­றும் சுகா­தார தேவை­க­ளைப் பூர்த்­தி­ செய்­வது இந்த இழந்­தாய்க்கு சவா­லாக அமை­யும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை.

பெற்­றோர்­க­ளின் உத­வி­யு­டன் குழந்­தை­க­ளைப் பரா­ம­ரித்­தா­லும் அரச அலு­வ­லர்­க­ளா­கிய இந்த தாய், தந்­தை­யர்­க­ளுக்கு குழந்­தை­களை பரா­ம­ரிப்­ப­தற்­கான செல­வினை சமா­ளிக்க முடி­யாது.
எனவே “அர­ச­த­லை­வ­ரி­டம் சொல்­லுங்­கள்” நிகழ்ச்­சித்­திட்­டத்­துக்கு அழைப்பு ஏற்­ப­டுத்தி உதவி கோரு­வ­தற்கு அயேஷா முடிவு செய்து அறி­வித்­தார்.

அது பற்­றிக் கவ­னம் செலுத்­திய அர­ச­த­லை­வர் குழந்­தை­க­ளின் பரா­ம­ரிப்­புக்­காக தலா ஐந்து இலட்ச ரூபா வீதம் நான்கு குழந்­தை­க­ளுக்­கும் 20 இலட்ச ரூபா நிதி வழங்­கி­னார்.

அந்­தத் தாய் குடும்­பத்­தி­ன­ ரு­டன் அர­ச­த­லை­வர் செய­ல­கத்­துக்­குச் சென்று நிதி­யு­த­வி­யைப் பெற்­றுக்­கொண்­டார்.