யாழ்ப்­பா­ணம்,  மண்­டை­தீவு உட்­பட வடக்­கில் படை­யி­ன­ரின் தேவைக்­காக சுவீ­க­ரிக்­கத் திட்­ட­மிட்ட நிலங்­கள் தொடர்­பில் எதிர்­வ­ரும் 29ஆம் திகதி பாது­காப்பு அமைச்­சின் செய­லர் மற்­றும் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் ஆகி­யோ­ருக்கு இடை­யில் யாழ்ப்­பா­ணத்­தில் சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வுள்­ளது.

மண்­டை­தீ­வில் நேற்­றை­ய­தி­னம் இடம்­பெற்ற காணி அள­வீட்டு முயற்சி கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னால் பாது­காப்பு அமைச்­சின் செய­ல­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.

இதன்­போது மண்­டை­தீவு உட்­பட யாழ்ப்­பா­ணத்­தில் மட்­டும் 45 இடங்­க­ளில் படை­யி­ன­ருக்கு நிலம் சுவீ­க­ரிக்க மேற்­கொள்­ளப்­ப­டும் முயற்­சி­கள் குறித்து இரா.சம்­பந்­தன் பாது­காப்­புச் செய­ல­ரின் கவ­னத்­துக்­குக் கொண்டு சென்­றார். இதை­ய­டுத்தே எதிர்­வ­ரும் 29ஆம் திகதி இந்­தச் சந்­திப்பு இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்­தச் சந்­திப்பு இடம்­பெ­றும் வரை­யில், அதா­வது எதிர்­வ­ரும் 29ஆம் திகதி வரை வடக்­கில் காணி சுவீ­க­ரிப்பு எது­வும் இடம்­பெ­றக்­கூ­டாது என்று சம்­பந்­த­னால் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்கை பாது­காப்பு அமைச்­சின் செய­ல­ரால் ஏற்­கப்­பட்­டது.