தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு, நாட்டின் அனைத்து மதுபான சாலைகளும் இன்றும்13, நாளையும்14 மூடப்பட்டிருக்குமென மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், புத்தாண்டு தினத்திற்கு மறுநாளான 15 ஆம் திகதி திங்கட்கிழமையும் மதுபானசாலைகளை மூடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ள போதும், அது குறித்த இறுதித் தீர்மானம், இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிட்த் தக்கது.