நாடு அடைந்திருக்கின்ற வெற்றியின் பலன்களை அனுபவிப்பதோடு, தேசிய இலக்குகளை அடைவதற்கு இந்தப் புத்தாண்டில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயரிய கலசாரா பண்டிகையானது,சந்தைப் பொருளாதார கோட்பாடுகளின் பாரிய தாக்கங்களுக்கு உள்ளாகியிருக்கும் இக்காலத்தல் அவற்றைக் கடந்து இந்தப் பண்டிகையின் உள்ளார்ந்த பண்புகளை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

அத்துடன், ஏற்பட்டிருக்கும் பாதகங்களை உணர்ந்து இயற்கையுடன் கலந்திருக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி, சித்திரைப் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடும் நாட்டு மக்களுக்கும்,புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கும் செளபாக்கியமும், சமாதனமும் கிடைக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்