இந்தியன் பிரிமியர் லீக் தொடரில்  கிங்ஸ்  லெவன் பஞ்சாப் அணியுடனான போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தமது தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது,(13.04.2019)

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான போட்டியை 08விக்கட்டுக்களினால் வெற்றி கொண்டதன் மூலமே பெங்களூர் அணி தொடர் தோல்வியை முடிவுக்கு கொண்டு வந்ததது.

சண்டிகாரில் இடம்பெற்ற போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் துடுப்படுத்தாட பணிக்கப்பட்டது,

இதனடிப்படையில்  முதலில் துடுப்ப்டுத்தாடிய பஞ்சாப் அணி 20ஓவர்கள் நிறைவில் 4விக்கட்டுக்களை இழந்து 173ஓட்டங்களை பெற்றுக் கொண்டது,

அணி சார்பில் கிறிஸ் கெயில் ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 99ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் 174 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு களமிறிங்கிய பெங்களூர் அணி இறுதி ஓவரின் 4 பந்துகள் மீதமிருக்க  இரண்டு விக்கட்டுக்கள் மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை கடந்தது,

பெங்களூர் அணி சார்பில் அணித்தழலைவர் விராத் கோலி 67ஓட்டங்களையும் ஏபிடி வில்லியர் 59ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.,

போட்டியின் ஆட்டநாயகனாக  ஏபிடி வில்லியர்ஸ் தெரிவானர்.