கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளுக்கு இருக்­கும் காப்­பு­றுதி வாய்ப்பை விவ­சா­யிக­ ளுக்­கும் வழங்க வேண்­டும் என்ற எமது கோரிக்­கை­யின் நியா­யப்­பாட்டை மயி­லங்­காட்­டில் இடம்­பெற்ற இடி மின்­னல் தாக்­கு­தல் உணர்த்­தி­யுள்­ளது என்று யாழ்ப்­பாண மாவட்டகமக்­கார அமைப்­புக்­க­ளின் அதி­கார சபைத் தலை­வர் கந்­தையா – தியா­க­லிங்­கம் தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் யாழ். மாவட்ட கமக்­கார அமைப்­புக்­க­ளின் அதி­கார சபைத் தலை­வர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இலங்­கை­யின் முக்­கிய பொரு­ளா­தார வளங்­க­ளாக விவ­சா­யம், மீன்­பிடி என்­பன உள்­ளன. மீன்­பி­டி­யில் ஈடு­ப­டும் கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளுக்கு தற்­போது இருக்­கும் காப்­பு­றுதி வாய்ப்பை விவ­சா­யி­க­ளுக்­கும் வழங்க வேண்­டும் என்று நாம் நீண்­ட­கா­ல­மாக கோரிக்கை விடுத்து வரு­கின்­றோம். இருப்­பி­னும் அரசு செவி­சாய்க்­க­வில்லை. ஆனால் அந்­தக் காப்­பு­று­தியை வழங்க வேண்­டி­ய­தன் நியா­யப்­பாட்டை மயி­லங்­காட்­டில் நேற்று (நேற்­றுன்­தி­னம்) இடம்­பெற்ற இடி­மின்­னல் தாக்­கு­தல் உணர்த்­தி­யுள்­ளது.

அதா­வது குறித்த சம்­ப­வத்­தில் ஒரு விவ­சா­யி­யும் இரு விவ­சாய கூலித் தொழி­லா­ளர்­க­ளும் தொழி­லில் ஈடு­பட்ட இடத்­தில் உயி­ரி­ழந்­த­னர். இருப்­பி­னும் அவர்­க­ளுக்கு சாதா­ரண இடர்­க­ளின்­போது உயி­ரி­ழப்­ப­வர்­க­ளுக்­குக் கிடைக்­கும் ஒரு லட்­சம் ரூபா மட்­டுமே உச்­ச­பட்­ச­மாக கிடைக்­கும். இருப்­பி­னும் கடற்­றொ­ழி­லா­ளர்­கள் தமது நீண்ட போராட்­டத்­தின் பய­னாக காப்­பு­றுதி வாய்ப்­பைப் பெற்­றுள்­ள­னர். அதா­வது வரு­டம் ஒன்­றுக்கு ஆயி­ரம் ரூபா காப்­பு­று­திப் பண­மாக செலுத்­தி­யி­ருப்­பின் கடற்­றொ­ழி­லில் ஈடு­ப­டும்­போது ஏற்­ப­டும் அசம்­பா­வி­தத்­துக்கு ஒரு மில்­லி­யன் ரூபா இழப்­பீட்­டி­னைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும்.

இத­னைச் சுட்­டிக்­காட்டி அந்த வச­தியை எமது விவ­சா­யி­க­ளுக்­கும் பெற்­றுத் தரு­மாறு பல ஆண்­டு­க­ளாக கோரிக்கை விடுத்து வரு­கின்­றோம். இருப்­பி­னும் எந்த அர­சுமே கண்­டு­கொள்­ள­வில்லை. இவ்­வா­றான கார­ணங்­க­ளால்­தான் விவ­சா­யம் இன்று அழி­வ­டை­யும் நில­மைக்­குச் செல்­கின்­றது. எமது கோரிக்­கை­யைக் கருத்­தில்­கொண்டு விவ­சா­யி­க­ளுக்­கும் இந்­தக் காப்­பு­றுதி வச­தியை ஏற்­ப­டுத்­தித் தர­வேண்­டும் எனக் கோரு­கின்­றோம் – என்­றார்.