யாழ் . மாநகர எல்லைக்குட்பட்ட மணத்தறை வீதியில் இரு தென்னை மரங்கள் மீது மின்னல் தாக்கியதில் இரு தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன . மேலும் இந்த விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர் . மணத்தறை வீதி சிவன் – அம்மன் கோவிலடியில் இன்று பிற்பகல் 3 மணிக்கு திடீரென காற்றுடன் மழை பெய்ய தொடங்கிய நிலையில் , திடீரென மின்னல் தாக்கியுள்ளது . இதனையடுத்து இரு தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்துள்ளதுடன் , சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் .