குண்டு வெடித்த பிறகே அந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ், தீயனைப்பு வாகனம் முதலியவை வந்ததாகவும், தேவாலயம் அருகே நின்றிருந்த வாகனம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதனை வெடிக்கவைப்பதற்காக கொண்டு சென்றபோது வெடிகுண்டு தாமாகவே வெடித்திருப்பதாகத் தெரிகிறது என்றும், கொழும்பில் உள்ள பிபிசி தமிழ் செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்து பிற்பகலில் வெடித்த வேன், ஞாயிறன்று தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்தியது என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். அவசர நிலை பிரகடனம் இலங்கையில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில், 6 தாக்குதல்கள் தற்கொலை குண்டுதாரிகளால் நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு தேசிய அவசர நிலையை அதிபர் சிறிசேன பிரகடனப்படுத்தவுள்ளார்.

ஏஎன்ஐ மற்றும் ராய்டர்ஸ் செய்தி நிறுவனங்கள் இதனை உறுதி செய்கின்றன. இன்று நள்ளிரவு முதல் இந்த அவசர நிலை அமலுக்கு வரும். இந்நிலையில் பிற்பகல் மூன்று மணியளவில் கொழும்புவில் உள்ள தனியார் பேருந்து நிலையத்தில் 87 டெடனேடர்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இலங்கையில் நேற்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதல்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 500 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து அரசு எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் அது தொடர்பாக இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பொறுப்பில் எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். அத்துடன், கைது செய்யப்பட்டவர்களில் பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் 6 தாக்குதல்கள் குண்டுதாரிககளால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் என போலீஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலிஸ் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன. தாக்குதல்கள் குறித்து விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழு ஒன்றை அதிபர் சிறிசேன அமைத்துள்ளார்.