கைது செய்யப்பட்ட நபா் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பு மட்டக்குளி பகுதியில் 21 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த குண்டுகளை கொழும்பு குற்றத் தடுப்பு பொலிஸார் இன்று மதியம் கைப்பற்றியுள்ளனர்.
டெனிஸ் பந்து அளவுகளில் தயாரிக்கப்பட்ட குண்டுகளே கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் நடத்திய விசாரணைகளில் இந்த குண்டுகள் தொடர்பான தகவல் தெரியவந்துள்ளன.