நாட்டில் உள்ள அனைத்து வீடுகளும் பாதுகாப்புச் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுமென, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

கடந்த ஞாயிறு அன்று நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக உருவாகியுள்ள அசாதாரணநிலையையொட்டி தற்போது நாட்டில் பாரிய தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஒவ்வொரு வீட்டிலும் அந்த வீட்டில் வசிக்கும் நிரந்தரக் குடியிருப்பாளர்களின் பட்டியல் வெளிபடுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடையாளம் தெரியாத நபர்கள் எவரும் நாட்டின் எப்பகுதியிலும் இல்லாதிருப்பதை உறுதிப்படுத்த முடியும் என தனது அறிவித்தலூடாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெளிவு படுத்தியுள்ளார்.