யாழ்ப்பாண மாவட்டத்தில் சில பகுதிகளில் காவல்துறை சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.  

யாழ்ப்பானம் ஜந்து சந்திப் பகுதியிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் அமைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

மேலும், குறித்த பகுதியில் பெருமளவான காவல்துறையினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

இதன்படி, யாழ்ப்பாண நகரத்திற்குள் உட்செல்லும் வாகனங்கள் காவல்துறையினரால் சோதனைக்கு உற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.  

இதேவேளை, வவுனியா நகரில் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, சுற்றிவளைப்பு பகுதியிலிருந்து வெளியேறும் பொதுமக்கள் சோதனைகளின் பின்னரே வெளிசெல்ல அனுமதிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.