ஆலயப் பூசகரின் சகோதரனின் சங்கிலியை முகத்தை மூடியவாறு வந்த நபர் ஒருவர் அறுத்துச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் கோண்டாவில் பழனியாண்டவர் ஆலயத்துக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது

பழனியாண்டவர் ஆலய பூசகரின் சகோதரன், தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்ற போது, பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.