நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, கொழும்பிற்கான சுற்றுலா பயணிகளின்  வரவு 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் கிசு கோம்ஸ்  (Kishu Gomes) இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். 

கொம்பிற்கு வெளியிலுள்ள பிரதேசங்களுக்கான சுற்றுலா பயணிகளின் வரவு 30 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். 

டுபாயில் இடம்பெற்ற சுற்றுலா மாநாடொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே,  இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் கிசு கோம்ஸ்  இதனைக் கூறியுள்ளார்.