12 ஆவது இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 54வது போட்டியில் Royal Challengers Bangalore அணி 4விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது.

Sunrisers Hyderabad மற்றும் Royal Challengers Bangalore ஆகிய அணிகள் மோதிக் கொண்ட போட்டி பெங்ளூரில் நேற்று இடம்பெற்றது.

போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற Royal Challengers Bangalore முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடி Sunrisers Hyderabad நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்களை இழந்து 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

துடுப்பாட்டத்தில் அந்த அணியின் Kane Williamson சிறப்பாக துடுப்பெடுத்தாடி 70 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் Royal Challengers Bangalore அணியின் Washington Sundar 3 விக்கட்களையும் Navdeep Saini 2 விக்கட்களையும் வீழ்த்தினர்.

176 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய Royal Challengers Bangalore அணி 19 வது ஓவரின் 2பந்துகள் வீசப்பட்ட நிலையில் 6விக்கட்களை இழந்து 178ஓட்டங்களை பெற்று தமது வெற்றியை பதிவு செய்தனர்.

துடுப்பாட்டத்தில் அந்த அணியின் Shimron Hetmyer  76 ஓட்டங்களையும்Gurkeerat Singh Mann  65ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் Sunrisers Hyderabad அணியின் Khaleel Ahmed 3விக்கட்களையும் Bhuvneshwar Kumar 2 விக்கட்களையும் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக Royal Challengers Bangalore அணியின்Shimron Hetmyer தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது