பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை நாட்டில் மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லையென  எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகையில்  மதவழிப்பாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியாலர்களிடம் பதிலளிக்கையிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை  நாட்டில் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள்  வெளியாகியிருந்த நிலையிலும் புலனாய்வு துறையினர் அது தொடர்பில் அசமந்தபோக்கினை கொண்டிருந்தனர்.

இதன் காரணமாகவே   உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற  தற்கொலை குண்டுத்தாக்குதல்களில்  நூற்றுக்கணக்கான உயிர்கள் கொல்லப்பட்டனர் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதேவேளை தாம் பிரதமராக பதவி வகித்த குறுகிய காலப்பகுதியில்  இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தால்  மஹிந்த  ராஜபக்‌ஷ   தரப்பினரால் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக   குற்றச்சாட்டுக்களை  முன்வைத்திருப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.