சில சமூக வலைத்தளங்கள் மீது,நேற்று முன் தினம் அமுற்படுத்தப்பட்ட தடை,தொடர்கின்றது

.WhatsApp, Facebook, YouTube மற்றும்Twitter உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன.

சமூக வலைத்தளங்கள் மீதான தடை குறித்த அறிவித்தல், அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் நேற்று முன் தினம் விடுக்கப்பட்டது.

நாட்டின் சில இடங்களில் ஏற்பட்ட அமைதியின்மை, தொடர்ந்தும் நீடிப்பதை தடுப்பதற்காக, சமூக வலைத்தள ஊடகங்களுக்கு தற்காலிகமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், குறித்த தற்காலிகத் தடை எப்போது நீக்கிக்கொள்ளப்படுமென்பது குறித்த எந்தத் தகவல்களும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.