இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில்,சமூக வலைத்தளங்களினூடாக வெளியிடப்படுன்ற பதிவுகள் தொடர்பில் தொடர்ந்தும் அவதானிக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர்,காவல்துறை அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி,சமூக வளைத்தளங்களில் வெளியிடப்படுகின்ற பதிவுகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக காவல்துறை தலைமையத்தினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில்,அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் கருத்துக்களை வெளியிடுகின்றவர்களை கைது செய்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு உட்படுத்துவதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இதேவேளை, நாட்டில், தற்போது அமைதியான நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சகல தரப்பினருக்கும் தமது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த  நிலையில்,அமைதியை சீர்குலைக்க முனைகின்ற நபர்களுக்கெதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும்,காவல்துறை ஊடகப் பேச்சாளர் காவல்துறை அத்தியட்சகர் ருவண் குணசேகர மேலும் கூறியுள்ளார்.