கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை நடைபெறும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது .

இப்பரீட்சைகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி . சனத் பூஜித தெரிவித்துள்ளார் .

கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்கள் காரணமாக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்னமும் வழமைக்குத் திரும்பவில்லை . இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக கடந்த 6 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள்
ஆரம்பிக்கப்பட்டிருந்தன . இந்நிலையில் பலரும் இப்பரீட்சைகளை பிற்போடுவதற்கான சாத்தியங்கள் குறித்து கருத்துக்களைத் தெரிவித்திருந்தன .

இதற்கு பதிலளிக்கும் வகையில் பரீட்சைத் திணைக்களம் இப்பரீட்சைகள் எதுவும் பிற்போடப்படமாட்டாது என அறிவித்துள்ளது .