தேவையானவை:

கற்பூரவள்ளி இலை – 5

சுக்கு – ஒரு சிறிய துண்டு

மிளகு – அரை டீஸ்பூன்

கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்

துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்

தக்காளி சாறு – 2 கப்

நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஓமவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றை லேசாக வதக்கி, விழுதாக அரைக்கவும். இதை தக்காளி சாறுடன் கலந்து தேவையான தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். சுவையான ஆரோக்கியம் தரும் கற்பூரவள்ளி ரசம் தயார்.