வெசாக் விடுமுறை தினம் வார இறுதியில் அமைவதால் வரும் 20 ஆம் திகதி பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்திருந்தது .

எதிர்வரும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை அரச பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விடுமுறையை தனியார் துறை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று தனியார்துறை தொழில்தருநர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் தொழில் உறவுகள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ரவீந்திர சமரவீரவினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைக்கான முடிவுகள் நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.