நம்முடைய உலகில் பல விளங்க முடியாத மர்மமான பிரதேசங்கள் உள்ளன. நம்ப முடியாத அளவில் அவைகள் மிகப்பெரியதாகவும் நவீன வசதிகள் இல்லாத காலத்தில் அப்படி செய்ய மனிதனால் எப்படி முடிந்தது எனவும் இன்றளவும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி உங்கள் ஆச்சரியப்படவைக்கும் வினோதமான 5 மர்மம் நிறைந்த இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம்

1. Baalbek (Lebanon) பால்பெக்

லெபனானில் கடல்மட்டத்திலிருந்து சுமார் 4000 அடி உயரத்தில் இருக்கும் இந்த பால்பெக் கிட்டத்தட்ட 9000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு கடவுள் பூமியில் வருகை புரிந்ததாகவும் ஏலியன்கள் தரையிறங்கும் தளமாகவும் இருந்ததாக மக்கள் நம்புகின்றனர்
இங்கு காணப்படும் கிரானைட் தூண்கள் ரோமானியக் கோயிலின் மிச்சம். 1,000 டன் எடையுடன் ஒரு தூணும் அதன் அருகிலேயே 1,200 டன் எடையுள்ள இன்னொரு தூணும் முக்கியமானவை. இது எப்போதிலிருந்து எதற்காக எப்படி இங்கு வந்தது என்பது கேள்வியாக உள்ளது.

2. யோனாகுனி நினைவுச்சின்னம்
Yonaguni Monument (Japan)
ஜப்பானில் உள்ள யோனாகுனி என்னும் கடல்பகுதியில் மிகவும் உயர்தரமான பாறைகளை கொண்டு உருவாக்கப்பட்ட சுமார் 76 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட பிரமாண்ட பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1987 ம் ஆண்டு இந்த கடல் பகுதியில் அரிய வகை சுறா மீன்களை பற்றிய ஆராய்ச்சியில் ஆராச்சியாளர்கள் இருக்கும் பொது கடல் பாசிகளால் சூழப்பட்ட இந்த நினைவு சின்னத்தை கண்டுபிடித்தனர் கடலுக்குள் அமைந்திருக்கும் இந்த நினைவுச்சின்னம் இயற்கையானதா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்ற ஆராய்ச்சி இன்றும் தொடர்கிறது.

3. Plain of Jars (Laos) பிளைன் ஆப் ஜார்

வடக்கு லாவோஸின் சியெங் குவாங் மாகாணத்தின் கிராமப்புறங்களில் பண்டைய வினோதமான நூற்றுக்கணக்கான ஜாடி குவியல்கள் இங்குள்ளன
3 மீட்டர் உயரம் கொண்ட இந்தக் குடுவை வடிவங்கள் குறிப்பிட்ட தூரம் வரை பரவி இருக்கின்றன. ஆள்நடமாற்ற பகுதியாக இருக்கும் இந்த இடத்தில் இத்தகைய குடுவைகள் எப்படி வந்தது என்ற ஆராய்ச்சி தொடருகின்றது.

4. Gobekli Tepe (Turkey) கொபெக்லி டெப்
கொபெக்லி டெப் கற்களை விட பழமையான மனிதனால் செதுக்கப்பட்ட கட்டிடகலை உலகில் எங்குமே இல்லை. கொபெக்லி திபே கற்களை ஆராய்ந்ததில் அவை 13,000 வருடங்களுக்கு முன்பு (கி.மு11000) செதுக்கப்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொபெல்கி திபே கற்களுக்கு பிறகு கிட்டத்தட்ட 6,500 வருடங்கள் வரை மனிதனால் ஆக்கப்பட்ட, செதுக்கப்பட்ட எந்த கல் கட்டிடக்கலையும் இல்லை. கொபெக்லி டெப் ‘ பகுதியில் இருந்து சிறிது விலகி தனியாக ஒரு மரம் மட்டும் உள்ளது. இந்த அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்பிற்கு முன்பிருந்தே அந்த பகுதி வாசிகள் அந்த மரத்தை காரணமே தெரியாமல் காலங்கலமாக புனிதமாக எண்ணி வருகின்றனர். பல ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தாலும் இதன் மர்மம் இன்னும் விலகவில்லை

5. Moai (Easter Island) மோய் உருவங்கள்

மோய் உருவங்கள் சிலியின் ஈஸ்டர் தீவுத் பொலினீசியாவில் பாறையில் செதுக்கப்பட்ட ஒன்றைக் கல் மனித உருவங்கள். ஏறக்குறைய எல்லா மோய் உருவங்களும் சிலையின் மூன்றில் ஒரு பகுதி தலைப்பகுதியாக செதுக்கப்பட்டிருப்பது அதிசயம். பாரோ என அழைக்கப்படும் உயரமான மொய் கிட்டத்தட்ட 33 அடி உயரமும் 82 டன் எடையும் உள்ளது. இவ்வளவு பிரமாண்டமாய் ஏன் இங்கு காணப்படுகிறது என்பது புதிராகவே உள்ளது.