நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்திற்கு அமைவாக முகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசம் அணிந்து மோட்டார் சைகிள்களில் பயணிப்பவர்களை கைது செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக சட்டமா அதிபரினால் பதில் காவல் மாஅதிபர் ஷந்தன விக்ரமரத்னவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.   
இதன்படி, முகத்தை முழுமையாக மறைக்கும் வகையில் தலை கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்களை கைது செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தலைக்கவச பிரச்சினை வருடாவருடம் தொடர்ந்து கொண்டுள்ளது. இதை தடுக்க வேண்டுமானால் முகம் மூடிய தலைக்கவச ஏற்றுமதியை தடுக்கலாம். எல்லா கடைகளிலும் விற்பனை செய்வது. மக்களை வாங்க செய்வது. அணிவதற்கு தடை விதிப்பது. நம் நாட்டு நிலமை .