நேற்று உயிரிழந்த யாழ் மாநகரசபையின் தீயணைப்பு வீரரின் குடும்பத்திற்கு சக பணியாளர்கள் நிதி திரட்டி வழங்கியுள்ளனர்.யாழ் மாநகரசபைக்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் நேற்று (16)

வடமராட்சி கிழக்கிற்கு தீயணைப்பு பணிக்கு சென்றபோது, நீர்வேலி பகுதியில் விபத்திற்குள்ளானது.இதில் அரியரட்ணம் சகாயராஜா (37) என்பவர் உயிரிழந்தார்.அவர் உயிரிழந்ததையடுத்து

நிர்க்கதிக்குள்ளாகியுள்ள மனைவி, குழந்தைகளிற்கு உதவும் முகமாக, யாழ் மாநகரசபையின் பணியாளர்கள் இன்று நிதி,

திரட்டினர். மாநகரசபை பணியாளர்களிற்கிடையே இன்று 183,000 ரூபா நிதி திரட்டப்பட்டது.இந்த நிதி இன்று உயிரிழந்தவரின் மனைவியிடம் கையளிக்கப்பட்டது.