வவுனியா – நெடுங்கேணி, நைனாமடுப் பகுதியில் எட்டுகால்களுடன் அதிசய ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளது. எனினும் குறித்த

ஆட்டுக்குட்டி இறந்த நிலையிலேயே பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு எட்டுக்கால்களைக் கொண்ட ஒரு தலையுடன் ஆட்டுக்குட்டி நேற்று இறந்து பிறந்துள்ளது.

இதனைப் பார்வையிட சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கு அதிகமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.