கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ம் அலை என கருதப்படும் கொரோனா நிலைமை காரணமாக அனைத்து அரச பாடசாலைகளும் நாளை (13) முதல் 17ம் திகதி வரை மூடப்படும் என்று கல்வி அமைச்சு இன்று (12) சற்றுமுன் அறிவித்துள்ளது.

இந்த நடைமுறையை தனியார் கல்வி நிறுவனங்கள், சர்வதேச பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்பு நிலையங்கள் அனைத்தும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.