மட்டக்களப்பு நகரில் வீடொன்றில் எரிவாயு சிலிண்டரை வெடிக்கவைத்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.இச்சம்பவம் மட்டக்களப்பு நகர், இருதயபுரம் கிராமத்தின் 4ஆம் குறுக்கு வீதியில் உள்ள வீடு ஒன்றிலேயே-

இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் தம்பிராசா பத்மராசா (65 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணையை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.