அவுஸ்திரேலியாவில் மூன்று ஆண்டு இடைவெளியில் இளம்பெண்ணுக்கு லொட்டரியில் தொடர்ந்து இருமுறை பரிசு விழுந்துள்ளது.மெல்டனை சேர்ந்த இளம்பெண் சமீபத்தில் $2.74 மதிப்புள்ள சுரண்டல் லொட்டரி டிக்கெட் வாங்கிய நிலையில் அதில் அவருக்கு $34,251.76 ஜாக்பாட் பரிசு விழுந்துள்ளது.

இது குறித்து அதிர்ஷ்டசாலியான அப்பெண் கூறுகையில், ஏற்கனவே இதே பரிசு எனக்கு மூன்றாண்டுக்கு முன்னர் லொட்டரியில் விழுந்தது.அப்போது எவ்வளவு

.மகிழ்ச்சியடைந்தேனோ அதை விட அதிகமாக மகிழ்ச்சியாக தற்போது உள்ளது.நான் என் கணவரிடம் விரைவில் ஒரு பெரிய அதிர்ஷ்டம் அடிக்க போகிறது என்று அடிக்கடி கூறுவேன். அது போலவே எனக்கு பரிசு விழுந்துள்ளது. என்னால் நம்ப

முடியவில்லை.பரிசுப் பணத்தில் முதலில் வாஷிங் மெஷின் மற்றும் மைக்ரோவேவ் வாங்குவேன், பின்னர் மீதமுள்ளவற்றை வங்கிக்கணக்கில் போடுவேன் என கூறியுள்ளார்..