பெலியத்த, பல்லத்தர பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் பெண் ஒருவரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று (02) காலை இடம்பெற்றதாகவும் குறித்த பெண்ணின் சடலம் வீட்டு வளாகத்தில்

இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த பெண் 52 வயதுடையவர் எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.