யாழ்ப்பாணம் – வைத்தியசாலை வீதியில் மரியன்னை ஆலயத்திற்கு அருகாமையில் யாழ்நகர் நோக்கி வேகமாக வந்த முச்சக்கர வண்டி கட்டுப்பாட்டையிழந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் வயோதிபப் பெண்மணி ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.