இந்துக்கள் வழிபடும் விநாயகர் சிலையை உடைத்த பெண் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பஹ்ரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பஹ்ரைனின் ஜூஃப்பைர் பகுதியில் ஒரு பெண் விநாயகர் சிலையை உடைப்பது போன்ற காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியானது. அந்த காணொளியில் பஹ்ரைன் முஸ்லிம்களுக்கான நாடு என அந்த பெண் குறிப்பிடுகிறார்.

காணொளியில் இடம்பெற்ற 54 வயதாகும் அந்தப் பெண் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பஹ்ரைன் காவல்துறையினர் தங்களின் சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பிட்ட மத நம்பிக்கையை அவமதித்தற்காக அந்த பெண் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பஹ்ரைன் போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.