கொழும்பு – மட்டக்குளி பிரதேசத்தில் இன்று (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரே இவ்வாறு உயி​ரிழந்துள்ளதுடன் மற்றுமொரு முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறியொன்றும் முச்சக்கரவண்டிகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்தையடுத்து லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.