கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று ஈரற்பெரியகுளத்திற்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை நண்பகல் வீதியை விட்டுவிலகி குடைசாய்ந்துள்ளதில் அதில் பயணித்த 16 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் வவுனியா மாவட்ட அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் இன்று விடுமுறை தினமாகையால் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நயினாதீவு நாகபூஷணி அம்மன் உற்சவம் நடைபெறுகின்றமையால் அதிகமான பயணிகள் யாழ்.நோக்கி பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.