குவைத் நாட்டின் மன்னர் ஷேய்க் சபா அல் அஹமட் அல் சபா தனது 91வது வயதில் நேற்று (29) காலமானார்.

அமெரிக்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் மரணமானார்.

2006 – 2020 வரை குவைத்தின் மன்னராக இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து முடிக்கான இளவரசர் ஷேய்க் நவாவ் அல் அஹமட் அல் சபா மன்னரானதாக அந்நாட்டு அமைச்சரவை தெரிவித்துள்ளது
.