கடத்தப்பட்ட மகனைத் தேடியலைந்த மற்றுமொரு தாயும் மகன் தொடர்பில் எவ்வித விபரமும் தெரியவராத நிலையில் உயிரிழந்துள்ளார்

மகாறம்பைக்குளம் வவுனியாவைச் சேர்ந்த பெரியசாமி மனோன்மணி வயது 70 என்ற தாயே காணாமற்போன தனது மகனின் முடிவு தெரியாமல் உயிரிழந்தவராவார்.

இவரது மகன் பெரியசாமி செல்வகுமார் வயது 45 கடந்த 2008 ஆம் ஆண்டு ஒட்டுக்குழுவால் கடத்தப்பட்டார்,தனது மகன் கடத்தப்பட்டதை கண்கண்ட சாட்சி தான் என்பதையும் அடிக்கடி கூறிவந்தார்
.
இந்த நிலையில் வவுனியாவில் தொடர் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் 1328 நாட்கள் போராடிவந்தவேளை அந்த தாய் உயிரிழந்துள்ளார்