யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் இன்று இளம் குடும்பஸ்தர் ஒருவர் சுய நினைவற்ற நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது

மரணமடைந்துள்ளார். மரண செய்தியை அறிந்த அவரது அம்மம்மாவும் மரணமடைந்துள்ளார்.

இளம் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது பேத்தியான வயோதிப் பெண்ணும் உயிரிழந்த சம்பவம் உடுவில், ஆலடியில் இன்று (07) காலை இடம்பெற்றுள்ளது.

30 வயதுடைய சௌந்தர்ராஜன் சகிதரன், அவரது அம்மம்மா மாணிக்கம் நாகேஸ்வரன் (வயது-70) ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இளம் குடும்பத்தலைவரை அவரது மனைவி இன்று அதிகாலை தூக்கத்தில் இருந்து

எழுப்பியுள்ளார். அவர் சுயநினைவற்ற நிலையில் இருப்பதை அறிந்து பேத்தியாரிடம் கூறியுள்ளார். அவர் திருநீறு பூசியுள்ளார்.

பின்னர் உடனடியாகவே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது அவர் அங்கு உயிரிழந்துள்ளார். அந்தச் செய்தியை அறிந்த

அதிர்ச்சியான பேத்தியாரும் மயங்கிச் சரிந்துள்ளார். அவரும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார்

மரண விசாரணைகளை முன்னெடுத்தார். சடலங்கள் உடகூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.