யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட துன்னாலை பகுதியில்

இன்று (20) அதிகாலை இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தேடுதல் நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து ஈடுபட்டிருந்ததாக தெரியவருகிறது.

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்த நால்வரையும் கைது

செய்வதற்கு நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் தலைமறைவாகியிருந்தவர்கள் என்று தெரியவருகிறது.

இதன்போது இவர்களுடன் தொடர்புபட்டிருக்காத நான்கு மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.