லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) தொடரின் முதலாவது போட்டியில் இன்று (26) கண்டி டஸ்கர்ஸ் – கொழும்பு கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன.

சமநிலையில் முடிவுற்ற இந்த போட்டியை சுப்பர் ஓவர் முறையில் நான்கு ஓட்டங்களினால் கொழும்பு வெற்றி கொண்டுள்ளது.

போட்டியில் முதலில் ஆடிய கண்டி அணி 3 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

அணி சார்பில் அதிகபட்சம் குசல் பெரேரா 52 பந்தில் 87, ரஹமனுல்லா குர்பஷ் 22

பந்தில் 53 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் கைய்ஸ் அஹமட் 28 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் வீழ்த்தினார்.

வெற்றியிலக்கை நோக்கி ஆடிய கொழும்பு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அணி சார்பில் அதிகட்சம் தினேஷ் சந்திமால் 46 பந்தில் 80, இசுறு உதான 12 பந்தில் 34

ஓட்டங்களை பெற்றனர். பந்து வீச்சில் நுவான் பிரதீப் 34 ஓட்டங்களுக்கு 2, நவீட்-உல் ஹக் 40 பந்தில் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
சுப்பர் ஓவர்
போட்டி சமநிலையானதை தொடர்ந்து சுப்பர் ஓவர் முறையில் முதலில் ஆடிய கொழும்பு 1 விக்கெட்டை இழந்து 16 ஓட்டங்களை பெற்றது.

17 ஓட்டங்களை நோக்கி ஆடிய கண்டி 12 ஓட்டங்களை மட்டுமே பெற்று தோல்வியடைந்தது.