¨கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அறபாநகர் கிராமத்தில்

மதில் விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை நாசீவந்தீவைச் சேர்ந்த சிறுவன் தனது தாய் தொழில் நிமிர்த்தம் சவூதி அரேபியாவிற்கு சென்ற நிலையில் அறபாநகர் பகுதியிலுள்ள தனது

சகோதரியின் வீட்டில் வசித்து வந்த நிலையில் எதிர் வீட்டு மதில் சுவரினை பிடித்து ஏறுவதற்கு முயற்சித்த போது மதில் சிறுவன் மேல் விழுந்துள்ளது. இந்த நிலையில்

குறித்த சிறுவனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை நாசீவந்தீவு முருகன் ஆலய வீதியைச் சேர்ந்த கோபால் பிறேமசாந்

என்ற (வயது-13) சிறுவனே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.