மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள

நிலையில் வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகர சபை முன்னெடுத்துவருகின்றது.

கடந்த இரண்டு தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடுமை மழை

காரணமாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேவேளை மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி உட்பட பல வீதிகளிலும் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்ததன் காரணமாக வெள்ள நீரை

வெளியேற்றுவதற்கான நடவடிக்கையினை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்தது