மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் மட்டக்களப்பு நகர் பகுதியில் வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டதுடன்,

விற்பனைக்கு பயன்படுத்திய முச்சக்கர வண்டிகள் இரண்டும், ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்படி 11 கிராம் மற்றும் 20 கிராம் கொண்ட ஹெரோயின் பொட்டலங்கள்

மீட்கப்பட்டுள்ளதாகவும் அவற்றின் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்